Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த சீசன் ஐபிஎல்-யில் சூப்பர் ஹீரோ…! தனியாளாக பஞ்சாப் அணிக்காக போராடி… கெத்து காட்டும் தமிழர்…!!!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள, தமிழக வீரரான ஷாருக்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ,1 போட்டியில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது  .குறிப்பாக சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் ,மோசமாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த   2 போட்டிகளிலும் ,பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஆனால் பஞ்சாப் கிங்ஸ் இடம்பெற்றுள்ள ,தமிழக வீரரான ஷாருக்கான் தனி ஆளாய்  நின்று பஞ்சாப் கிங்ஸிர்க்கு ரன்களை குவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ,ஷாருக்கான் தனி ஆளாய் நின்று 47 ரன்களை குவித்தார். அதுபோல நேற்று நடைபெற்ற ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியிலும் ,17 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸின்  ‘சிறந்த  பினிஷராக’ ஷாருக்கான் திகழ்ந்து வருகிறார்.

Categories

Tech |