மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மொய்த்ரா வாக்களித்தார்.
மேற்குவங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடந்து வருகின்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மொய்த்ரா தனது வாக்கினை செலுத்தியுள்ளார். வாக்கு செலுத்திய பின் அதற்கு அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட மையினை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.