சேலம் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வேடுகாத்தாம்பட்டி பகுதியில் புத்திரர் என்பவர் வசித்து வந்தார். இவர் தினந்தோறும் அப்பகுதியிலுள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில் முனியப்பன் கோவிலுக்கு சென்ற புத்திரர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் புத்திரர் உடல் இறந்து கிடப்பதாக ரமேஷ் புத்தரின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த புத்தரின் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புத்திரர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.