Categories
கிரிக்கெட் விளையாட்டு

ருத்ர தாண்டவம் ஆடிய ரசலை…! குறிவைத்து தூக்கி மாஸ் காட்டிய சாம் கர்ரான் …!!!

நேற்று நடந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய ரசலை , சிஎஸ்கே வீரர்  சாம் கர்ரான்  தன்னுடைய துல்லியமான பவுலிங்  மூலம்  ரசலை வெளியேற வைத்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால்  முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் ருதுராஜ்,டு பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் குவித்தது. 221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா அணி 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆண்ட்ரூ ரசல் தன்னுடைய ருத்ர தாண்டவத்தை காட்டினார்.

சிஎஸ்கே பவுலர்களின் பந்துகளை, சிக்ஸர்களாகவும் , பவுண்டரிகளாகவும் அடித்து விளாசினார். நேற்றைய போட்டியில் அவருடைய வெறித்தன ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிஎஸ்கே வீரர்களுக்கு  மரண பீதியை காட்டினார். இதனால் இவரை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் திணறினர். அப்போது சிஎஸ்கே வீரனான சாம் கர்ரான் 12வது ஓவரில் பவுலிங் செய்தார். இந்த 12-வது ஓவரில் 2-வது பந்தை சிக்ஸர் அடிப்பதற்காக,  ரசல் தயாராக இருந்தார். அந்த பந்தை சாம் கர்ரான் இன்ஸ்விங்காக மாற்றி வீச, ரசல் அதை அடிக்காமல் தவறிவிட்டதால் ,பந்து ஸ்டெம்ப் மீது விழுந்தது. இதனால் ரசல் ஆட்டமிழந்தார். எனவே துல்லியமாக செயல்பட்ட சாம் கர்ரனுக்கு , ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

https://twitter.com/Nanthak69999164/status/1385081529433354243

Categories

Tech |