Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இல்லாததை இருப்பதாக காட்டி…. போலி ரசீது தயாரித்த அதிகாரி….லஞ்ச ஒழிப்பு அதிகாரியின் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணியில் மோசடி செய்த பேரூராட்சி அதிகாரி மற்றும் அவருக்கு துணையாக இருந்த வாலிபரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவர் அப்பகுதியில் பேரூராட்சி பராமரிப்பு பணியில் முறைகேடு செய்வதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போது குடிநீர் குழாய்கள் சீரமைத்தல், செப்டிங் டேங்க் சுத்தம் செய்தல் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக அவரது உறவினர் முகவரியை வைத்து போலி ரசீது தயாரித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இல்லாத நிறுவனத்தை இருப்பதாக காட்டி அதன் பெயரில் பராமரிப்பு பணிக்காக 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் மோசடி செய்ததும் தெரியவந்ததுள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் உடந்தையாக இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது. இதனால் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் இருவரையும்  லஞ்ச ஒழிப்பு  அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |