மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டம் , தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதே போல ,மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40லிருந்து 50 கிலோ மீட்டர் வரை வீசுவதால் மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்கு 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்குச் சென்ற வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.