சாலையில் நடந்து கொண்டிருந்த நபரின் செல்போன் வெடித்து தீ பிடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் ஒரு இளைஞர் தனது பெண் தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபரின் தோளின் மீது மாட்டிருந்த பேக்கில் இருந்த செல்போன் தீடிரென வெடித்து தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் அந்த இளைஞரின் கை, கண் இமை மற்றும் முடியில் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.
This is the shocking moment a phone catches fire inside a man’s bag in China. pic.twitter.com/4C5zz8Ov6t
— South China Morning Post (@SCMPNews) April 20, 2021
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் விசாரித்ததில் அவர் 2016இல் சாம்சங் போன் வாங்கியதாகவும், தற்போது அதில் பேட்டரி பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார். அதனால் செல்போன் வெடித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்வம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.