ரூபாய் 8 கோடி செலவில் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட சாலைகள் புதிய தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிராஜ் நகராட்சிக்குட்பட்ட 24 நாடுகளிலும் பல்வேறு சாலைகள் சேதமடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருப்பதால் அதனை சீரமைக்கக்கோரி சீர்காழி எம்.எல்.ஏ பாரதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சாலைகளை சீரமைப்பது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம் மற்றும் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் புளிச்சக்காடு சாலை, எம்.எஸ்.கே நகர் சாலை, வாடி சாலை ஆகியவை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதேபோல் சுந்தராம்பாள் நகர். வீரம் நகர், தவசி நகர், புழுக்க பேட்டை, பெரிய வகுப்பு கட்டளை தெரு, நங்கநல்லூர் தேசாய் கதிர்வேல் தெரு, மாரி முத்து நகர், தென்பாதி திருவேங்கடம் பிள்ளை பூங்கா சாலை, கிழக்கு தெரு, கணபதி நகர், உள்ளிட்ட சாலைகளை தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகின்றது.