Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தேமல், படை போன்ற பிரச்சனை உங்களுக்கு இருக்கா..? வீட்டில் இருக்க இந்த பொருளை வைத்து ஈஸியா சரி பண்ணலாம்..!!

வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம்.

சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நமக்கு தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்.

பூவரச மரத்தின் காய்களை பறித்து அம்மியில் வைத்து அரைத்து அதன் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் அகலும்.

அருகம்புல் உடல்நலத்திற்கும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் முக்கியமானது. இதனை அரைத்து தேமல் உள்ள இடத்தில் பயன்படுத்தலாம்.

நாயுருவி இலையை அரைத்து அதன் சாறை தடவி வந்தால் தேமல், படை போன்றவை குணமாகும்.

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி அதனை பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து வந்தால் தேமல் குணமடையும்.

எலுமிச்சை தோலை உலர்த்தி அதனை தூளாக்கி படிகாரம் கலந்து குழைத்து பூசி வந்தால் தேமல் குணமடையும்.

மஞ்சளை இடித்து நல்லெண்ணெயில் போட்டு தேமல் உள்ள இடத்தில் பூச வேண்டும்.

சுக்குடன் சிறிது துளசி இலையை வைத்து மையாக அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வரும்பொழுது தேமல் குணமடையும்.

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து முகத்தில் தடவ கரும்புள்ளி, தேமல் போன்றவை குணமாகும்.

கருஞ்சீரகத்தை எண்ணெய் விட்டு வறுத்து அதனை அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து தடவும்போது தேமல் பிரச்சனை குணமாகும்.

வசம்பு ஒரு துண்டு பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் தேமல் குணமடையும்.

குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பூசி வந்தால் தேமல் குணமாகும்.

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து சேர்த்து வருவதன் மூலம் தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இந்த வீட்டு வைத்தியத்தை பயன்படுத்துவதன் மூலம் எந்தவித பக்கவிளைவுகளும் வராது

Categories

Tech |