Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கவனம் தேவை..! ஆதரவு கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.

திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம் அனைத்து விஷயங்களிலும் தேவைப்படும். கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விலகிச்செல்வீர்கள். வெளியூர் பயணங்களின் போழுது கவனம் தேவை. பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு துரோகியாக மாறக்கூடும். அவர்களை அடையாளம் கண்டுக்கொண்டு விலகியே இருக்க வேண்டும். இன்று அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்தவற்றை நிறைவேற்றும் நன்றாக இருக்கும். மக்களின் பரிபூரணமான ஆதரவை பெறமுடியும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய வகையில் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இன்றையதினம் அமையும். மாணவர்கள் கல்விக்காக உழைக்க வேண்டியதிருக்கும். இன்ற பூர்வீக சொத்துக்களிலுள்ள தடைகள் விலகிச்சென்று முன்னேற்றமான தருணங்கள் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |