ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, இருப்பு மற்றும் விநியோகத்தை தினசரி கண்காணிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், அவரச தேவைகளுக்கு விமானம் மூலம் ஆக்சிஜனை விநியோகிக்கவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.