கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களிடம் மோடி நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மேலும் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் நாளை காலை 10 மணிக்கு அவசர ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்துவதன் வழிமுறைகளை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதல்வரும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.