Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 1 முதல்…. தமிழக அரசு திடீர் அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மே 1 ஆம் தேதி முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை 10 சதவீதத்திற்கு கீழ் குறைக்க ஏதுவாக PT-PCR டெஸ்ட்டை மேலும் உயர்த்தப்படும் என்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |