தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை மே 1 ஆம் தேதியன்று திறக்கக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நாளான மே இரண்டாம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.