Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் வந்த விளைவு… கால்களை இழக்கும் அபாயம்… நம்பிக்கையூட்டும் இளம்பெண்..!!

ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரித்தானிய பெண்ணிற்கு இரத்தக்கொப்புளங்கள் ஏற்பட்டதால் கால்களை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியில் வசித்து வரும் Sarah Beuckmann (34) என்ற இளம்பெண் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டு கொண்டதும் அவருக்கு முதலில் ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் உருவாகியுள்ளது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு Sarah-வின் கால்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து Sarah-வின் கால்களில் சிவப்பு நிற புள்ளிகள் உருவாகியுள்ளது. இதனால் Sarah மருத்துவரை சந்திப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியுள்ளார். ஆனால் அதற்குள் அவருடைய காலில் ஏற்பட்டிருந்த அந்த சிவப்பு நிற புள்ளிகள் கொப்புளங்களாக மாற்றமடைந்துள்ளது. இதனால் Sarah உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு தனது கால்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

மேலும் அவர் மருத்துவமனையில் 16 நாட்கள் இதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து முதலில் கால்களில் தோன்றிய அந்த கொப்புளங்கள் பிறகு முகம், கைகள் மற்றும் உட்காரும் இடம் என வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் Sarah மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு நடக்க முடியாத காரணத்தினால் நாற்காலியில் தான் வலம் வருகிறார். இவ்வாறு கால்களை இழக்கும் நிலையிலும் Sarah இந்த பக்க விளைவுகளால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வாருங்கள் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து Sarah-வை பரிசோதித்த மருத்துவர் அவரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |