பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மூத்த அண்ணனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா .
இவர் இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் . சமீபத்தில் நடைபெற்ற விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை சுஜிதாவுக்கு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த அழகிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.