நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடக்கும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாளை முதல் 27ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுதிகளில் தங்கி உள்ள 500க்கும் மேற்பட்ட Ph.D மாணவர்கள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.