Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் புதிய விண்வெளி ஆய்வு மையம்….2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவு….ரோஸ்காஸ்மோஸ் ஆய்வு நிறுவனம் அறிவிப்பு….!!!

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியேறுவதாகவும்புதிய  விண்வெளி ஆய்வு மையத்தை தொடங்கயிருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

1998 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியினால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஜப்பான் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி நிறுவனங்கள்  ஒன்று சேர்ந்து செயல்படுத்தினர்.

இந்த நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் அனைவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து சுழற்சி முறையில் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் நீடித்து வருவதால் அதனை மனதில் கருதி தனக்கென்று சொந்தமான ஆய்வு மையத்தை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வருகிற 2024 ஆம் ஆண்டுடன் சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வு மையங்களுடன் ரஷ்யா ஏற்படுத்திய ஒப்பந்தமும் முடிவடைய இருக்கிறது.ஆகையால் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மோஸ் 2025 ஆம் ஆண்டிற்குள் சொந்தமான விண்வெளி ஆய்வு மையத்தை தொடங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெளியேறுவது குறித்து எந்த ஒரு முடிவும் தற்போதுவரை எடுக்கவில்லை எனவும் ஒப்பந்த நிலை முடியும் பொழுது கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான முறையில் முடிவை எடுக்க இருப்பதாகவும் ரோஸ்காஸ்மோஸ் மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |