Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பயந்து ஓடுறவன் இல்ல TR… செம மாஸ் ஸ்பீச்…. என்ன நடக்குது தயாரிப்பாளர் சங்கத்தில்..?

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  நிர்வாகிகளான டி.ராஜேந்திரன், ஜேஎஸ்கே,  சிங்காரவேலன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றைக்கு கௌரவ செயலாளரான ராதாகிருஷ்ணன், பொருளாளராக இருக்கக்கூடிய சந்திர பானர்ஜி, துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கதிரேசன் ஆகிய 3 பேரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  தேர்தலில் நின்றது சட்டதிட்ட விதியின் படி  விதிமீறல் செய்து தான் தேர்தலில் நின்றிருக்கிறார்கள் என்ற காரணத்தால், அவர்கள் மூன்று பேரும் பதவி வகிப்பதற்கு முடியாது என உய்ரநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளார்.

எங்களை சங்கத்தில் இருந்து இடைக்கலமாக் நீக்கி நீங்கள் தொல்லை கொடுத்தாலும் சரி, தொந்தரவு கொடுத்தாலும் சரி, தூர தூக்கி எறிந்தாலும் சரி, தொலைதூரத்தில் போட்டாலும் சரி எங்கே நின்றும் குரல் கொடுப்போம். விபிஎஸ் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோமே ஏன் உங்களால் போராட முடியவில்லை. ஏன் உங்களால் குரல் கொடுக்க முடியவில்லை. லோக்கல் பாடி வரியை எதிர்த்து நாங்கள் போராடினோம்.

அன்றைக்கு மறைந்துவிட்ட முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுடைய சதுக்கத்திலும் , கலைஞருடைய சதுக்கத்திலும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சதுக்கத்திலும் ,  புரட்சித்தலைவர் அம்மா ஆகிய நான்கு பேரின் நினைவிடத்திற்கு சென்று நாங்கள் நின்று குரல் கொடுத்தோம். சினிமாவுக்கு எதுவுமே செய்யவில்லை என்று. இன்றைக்கு முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட வாய்க்கா வரப்பு தகராறா ? இல்லையே

எங்கள் திரை உலகத்திற்கு ஏன் செய்யவில்லை என்று அவர்களிடம் கேட்டேன். அது கூட எப்படி கேட்டேன் ஒரு தீபாவளியோ… பொங்கலோ….  வந்தால் ஒரு குழந்தைக்கு அப்பா தான் சட்டை எடுத்து தர வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் தாவணி எடுத்து தர வேண்டும். அது மாதிரி ஒரு தந்தையிடம் உரிமையாக போராடுவது போல் தான் எங்கள் திரையுலகத்திற்கு தமிழக முதல்வர் செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்று சொன்னோம்,

அவருக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை, கோரிக்கை வைக்கிறேன் என்று சொன்னேன். அந்த கோரிக்கையோடு தமிழக முதல்வருக்கு சின்ன வருத்தம் ஏற்பட்டால் கூட பரவாயில்லை நான் குரல் கொடுக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்க ஏன் குரல் கொடுக்கவில்லை. அப்புறம் எதற்கு உங்களுக்கு பதவி என டி.ராஜேந்திரன் ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |