Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நடக்குது சினிமா துறையில்…? பதவிக்கு தடை விதித்து உத்தரவு…. டி.ஆர் திடீர் பிரஸ் மீட் ..!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கவுரவ செயலாளராக இருக்கக்கூடிய நானும், செயலாளராக இருக்கக்கூடிய நம்முடைய ஜேஎஸ்கே யும், துணைத் தலைவராக இருக்கக் கூடிய சிங்காரவேலன் அவர்களும் இன்றைக்கு உங்களை முக்கியமாக சந்திப்பதற்கு காரணம்.. உயர்நீதிமன்றத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றைக்கு கௌரவ செயலாளராக முன்பு இருந்த தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொன்ன திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும்,

அதைப்போல பொருளாளராக இருக்கக்கூடிய அன்புக்குரிய நண்பர் சந்திரபாஜெயின் அவர்களும், அதே போல துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட கதிரேசன் அவர்களும்…. 3 பேரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  தேர்தலில் நின்றது சட்டதிட்ட விதியின் படி  விதிமீறல் செய்து தான் தேர்தலில் நின்றிருக்கிறார்கள் என்ற காரணத்தால், அவர்கள் மூன்று பேரும் பதவி வகிப்பதற்கு முடியாது.

இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கோர்ட் ஆர்டர் வந்திருக்கிறது. வேறுசில சூழ்நிலையின் காரணமாக வெளியில் தெரியவில்லை. அதைத்தான் சொல்கிறோம் அவர்கள் மூன்று பேரும் பதவியில் நீடிக்க முடியாது, இடைக்கால தடை விதித்து இருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உடைய விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்குள் யார் படம்  எடுத்து சென்சார் செய்து வெளியிட்டு இருக்கிறார்களோ அவர்கள் தான் தலைவருக்கோ அல்லது  செயலாளருக்கோ  அல்லது துணை தலைவருக்கோ அல்லது பொருளாளருக்கோ போட்டியிட முடியும்.

ஆனால் இவர்கள் மூன்று பேருமே….  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முரளி அணியில் இருந்த ராதாகிருஷ்ணன் அவர்களும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட சந்திரபாஜெயின் அவர்களும் படத்தை இவர்கள் நேரடியாக எடுத்தார்களா ? கேள்விக்குறியாக இருந்தது. ஒரே ஒரு காட்சி வேறு ஒரு மாநிலத்தில் அதுவும்,  பாண்டிச்சேரியில் சென்றுதான் இவர்கள் ரிலீஸ் செய்திருப்பதாக சொல்லப்பட்டு, அன்றைக்கு முன்னாள் நீதியரசர் வேட்புமனு பரிசீலனை செய்வதற்கு அந்த இடத்தில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அன்றைக்கு சிங்காரவேலன் எங்கள் அணியில் நிற்கவில்லை. எனக்கு மூன்று பேரும் நண்பர்கள் என டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

Categories

Tech |