நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அந்தவகையில் குஜராத்தில் தாயொருவர் அகமதாபாத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை முன்பு வந்து நின்று தன்னுடைய மகனுடன் வீடியோ காலில் பேசுகிறார்.
அதில் எப்படி இருக்கிறாய் மகனே? நன்றாக சாப்பிடுகிறாயா? நீ விரைவில் குணமடைந்து வருவாய் என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார். இதைப் பார்த்து அருகில் இருப்பவர்களுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. இதற்கு காரணம் என்றும் என்னவென்றால் அவருடைய மகன் கொரோனவால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டார். ஆனாலும் அந்த தாய் மகன் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக பேசிய வீடியோவை பார்த்து தற்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்.
தன் மகன் உயிருடன் இல்லை என்பதை தெரிந்தும், அவருடைய மனம் அதை ஏற்க மறுக்கிறது. இதனால் இதனால் அவருடைய உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அனைவருடைய நெஞ்சை உருக்கும் சம்பவமாக இருக்கிறது. பிள்ளைகளை இழந்து வாடும் பெட்ரா தாய்களுக்கு தான் தன் குழந்தை இல்லாத வாழ்க்கை நரகம் என்று…!