சுப முகூர்த்த நாளை ஒட்டி பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரத்தில் கூட்டம் களை கட்டியதால் சமூக இடைவெளி காற்றில் விடப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூபாய் 500 என்ற அபராதத்தையும் விதித்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் சுப முகூர்த்த நாளை ஒட்டி பட்டுப்புடவை எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இதையடுத்து கடைகளில் கூட்டம் அலை மோதியதால் சமூக இடைவெளி காற்றில் விடப்பட்டது.