அமெரிக்கா தங்களுடைய இணையதள பக்கத்தில் கொரோனாவின் பரவலை முன்னிட்டு ஜெர்மனி நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொற்றின் பரவல் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு பிரிவு மற்றும் கட்டுப்பாட்டிற்கான மையம் ஜெர்மனியில் 4 ஆவது முறையாக பயண எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதேசமயம் ஜெர்மனியும் தொற்றின் பரவலைத் தடுக்கும் பொருட்டு சில தடை உத்தரவை பிறப்பித்தது.
அதாவது ஜெர்மனியில் வாழும் உரிமமில்லாத அமெரிக்க வாசிகள் தேவைகளின்றி ஜெர்மனிக்குள் நுழையக்கூடாது என்றது. இருப்பினும் அமெரிக்க வாசிகள் ஜெர்மனிக்குள் வந்தால் கொரோனா பரிசோதனைக்கும், தங்களை தனிமைப்படுத்துவதற்கும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியது.
https://twitter.com/hashtag/Germany?src=hash&ref_src=twsrc%5Etfw