நாடு முழுதும் கொரோனா பரவல் மீதும் வேகமெடுத்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இஇதையடுத்து சத்திஸ்கர் உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் என்ற பகுதியில் டிஎஸ்பி ஷில்பா சாஹு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தும் கூட கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கொரோனாவையும் பொருட்படுத்தாமல் கொரோனா விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில் அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.