நெல்லையில் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக மீனை வாங்குவதற்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே முக கவசம் அணியாத நபர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீன் பிடிப்பதற்கு தடைபோட்டிருப்பதால் மீனவர்கள் கடலிற்கு சென்று மீனை பிடிக்கவில்லை. இதனையடுத்து கடற்கரை கிராமங்களான கூடுதாழை, கூட்டப்பனை, உவரி உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்கள் மீனை நாட்டுப் படகின் மூலம் பிடித்து திசையன்விளை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றனர். இதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.