நெல்லையில் கீழே கிடந்த 58,000 ரூபாயை எடுத்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் மாரியம்மாள் என்பவர் வசித்துவருகிறார் நிலையில் இவர் தெருக்களில் கிடைக்கும் பாட்டில்கள், பழைய பேப்பர்களை எடுத்து விற்பனை செய்யும் பணியை செய்து வருகிறார். இதற்கிடையே அவர் சேரன்மகாதேவிக்கு செல்லும் மெயின் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அங்கு 58,610 ரூபாயும், செல்போன் மற்றும் 2 ஆதார் கார்டுகளுடன் கீழே கிடந்துள்ளது.
அதனை எடுத்த மாரியம்மாள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்து மணிப்பர்சை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதனை பாராட்டிய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர மாரியம்மாளுக்கு குத்துவிளக்கை பரிசாக அளித்துள்ளார்.