துபாய் இந்தியா இடையிலான விமான சேவையை வரும் 25 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது.
இதைதொடர்ந்து துபாய் இந்தியா இடையிலான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் துபாய் இந்தியா இடையே வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் அடுத்த பத்து நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.