கொரோனா நோய் பரவல் குறித்து மேற்குவங்காளத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இந்த கொரோனா பரவலின் மத்தியில் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்த நிலையில் இன்னும் 2 கட்ட வாக்குப் பதிவுகள் உள்ளன. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவது குறித்து அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதால், நாளை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் மோடி அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.