திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் திண்டுக்கல்லில் இருந்து மற்ற ஊர்களுக்கு பேருந்துகள் எத்தனை மணி மணி வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ரயில் பயணங்களில் வந்தவர்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு 8 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனையடுத்து நேரம் செல்ல செல்ல பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பலரும் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோகளில் பயணம் மேற்கொண்டனர். மேலும் பலர் நீண்ட நேரமாக பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து அதன்பின் தங்களுடைய இடங்களுக்கு செல்ல முயன்றனர். இதையடுத்து பேருந்து நிலையம் உட்பட எந்த பகுதியிலும் ஹோட்டல்கள், டீக்கடை போன்ற எதுவும் இல்லாததால் உணவு கிடைப்பதில் பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதேபோல் பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய பல்வேறு பேருந்து நிலையங்களிலும் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருந்தனர்.