சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலத்த காயம் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்தார்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனலட்சுமியுடன், ஆறுமுகம் இளையான்குடி அருகே வாணி கருமலையான்கோவிலுக்கு மொபட்டில் வந்துள்ளார்.
இதையடுத்து தெற்கு கோட்டையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது வேகமாக மோதியது. அதில் தனலட்சுமி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.