தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி கீழாநெல்லியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள் தீர அருமருந்தாக அமைகிறது. கீழாநெல்லி 50 கிராம் எடுத்து, அதை 200 மில்லிலிட்டர் எருமைத்தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாட்களும் உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை மாலை என நான்கு நாட்கள் சாப்பிட சிறுநீர் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.