திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வன்னியபட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ம.மூ.கோவிலூர் பிரிவு அருகே லியாகத்அலி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணியில் சாரம் கட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மின்னழுத்த கம்பி ஒன்று எதிர்பாராதவிதமாக பால்சாமி மீது உரசியதில், தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.