Categories
அரசியல் மாநில செய்திகள்

அலட்சியக் கிருமி.. மத்திய அரசை கடுமையாக….. சாடிய கமல்ஹாசன் …!!

கொரோனா மட்டுமல்லாமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் தனக்கு தொடர்ந்து மோசமான செய்திகள் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா மட்டும் இந்தியாவிற்கான பேரிடர் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் தான் என்ன விமர்சித்துள்ளார்.

பொய்யான கொண்டாட்டங்களையும், வெற்று உரைகளையும் விடுத்து நாட்டிற்கு தீர்வை கொடுங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதே போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா மட்டுமல்லாமல் அலட்சியம் என்ற கிருமி தாக்குதலாலும் இந்தியா அல்லாட்டி கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிலைப்பாட்டால தடுப்பூசிகளின் விலை உயர்ந்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள கமலஹாசன், மக்களை காப்பது அரசன் பொறுப்பு என நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமை பெருமைக்குரியது அல்ல  என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Categories

Tech |