தினசரி ஒரு கோப்பை இஞ்சி தேநீர் உங்கள் உடல் ஆரோக்கியத்தை உத்தரவாதப்படுத்தும். இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் அலர்ஜிகள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலையும் இது ஊக்குவிக்கும். வயிறு கோளாறுகள், குமட்டல், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு களை தணிக்கும். சளி, சைனஸ் தொந்தரவுகள்,தொண்டை கரகரப்பு மற்றும் புண் ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும்.
இதனை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையானவை:
இஞ்சி: 2 இஞ்ச் துண்டு(தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது)
தண்ணீர்: 3 கப்
தேன்/எலுமிச்சை – தேவையான அளவு
செய்முறை:
மூடிய பாத்திரத்தில் நீர் கொதிக்கத் தொடங்கும் போது இஞ்சியை சேர்க்கவும். தீயை குறைத்து சிம்மில் 20 நிமிடங்கள் வைக்கவும். அதன் பிறகு இறக்கி வடிகட்டி, வடி சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது உங்களுக்கு புத்துணர்வுடன் சுவையான இஞ்சி ஹெர்பல் டீ தயார்.