Categories
தேசிய செய்திகள்

“என்னடா இது கொடுமை” மருத்துவமனையில் தீ விபத்து…. 13 கொரோனா நோயாளிகள் பலி – பெரும் சோகம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் 17 பேர் சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அதில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |