Categories
தேசிய செய்திகள்

கடும் கட்டுப்பாடு…? மாநில முதல்வர்களுடன்…. பிரதமர் இன்று அவசர ஆலோசனை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் இருப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் குவியல் குவியலாக சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இறந்தவர்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதோ அந்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரச ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |