Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க போயும் பலனில்ல..! முதியவர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டியில் சுந்தரம் (75) என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமடையாததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் சுந்தரம் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |