Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிக்காம இருக்க முடியாதாடா..! கண்டித்த தாய்க்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மது அருந்தியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் (26) என்ற மகன் இருந்தார். இவர் திருப்பூரில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவருடைய தாய் ராணி மோசமாக கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உள்ள நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |