Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள சும்மா விடக் கூடாது….. மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை தாக்கியதால் அவர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துவாரகாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக பணிபுரிந்து வரும் நிலையில் பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் பரத்துக்கும் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து முத்தையாவிடம் பரத் பணம் கேட்ட போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஒன்று சேர்ந்து பரத்தை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த பரத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சென்று பரத்தை தாக்கியவர்களை கைது செய்யப்படும் என்று கூறிய பின்பு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் பெருங்காடு கடைவீதி முன்பு சாலை மறியலில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலைக்குள் பரத்தை தாக்கியவர்களை கைது செய்யப்படும் என்று உறுதியளித்த பின்பு சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.

Categories

Tech |