புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நிலையப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த பாபு என்பவருடன் சேர்ந்து கட்டிட தொழில் பணிக்கு சென்று விட்டு வேலை முடிந்ததும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.