Categories
உலக செய்திகள்

மாமனாரை திருமணம் செய்த பெண்… வயது வித்தியாசம் தடை இல்லை… மனம் திறந்து பேசிய தம்பதிகள்…!!

அமெரிக்காவில் 31 வயது இளம்பெண் 60 வயதான தனது மாமனாரை திருமணம் செய்துகொண்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அமெரிக்காவில் எரிகா குயிகிள்என்ற 31 வயதான பெண் சில ஆண்டுகளுக்கு முன் ஜஸ்டினை என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்த நிலையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு எரிகா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் ஜஸ்டினின் என கூறப்படுகிறது. ஏனெனில் எரிகா தனது மாமனாரான ஜெப் காதலித்ததால் தான் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து எரிகா கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது மாமனாரான ஜெப்பை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மேலும் இது குறித்து எரிகா கூறுகையில் எங்கள் இருவருக்கும் சரியான புரிதல் இருந்து வருகிறது என்றும், எந்த ஒரு வெறுப்பு உணர்வும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து எங்கள் உறவு முறையை பார்த்தால் மிகவும் வித்தியாசமாக தான் இருக்கும் எனவும், எங்களுடைய காதல் வெற்றிபெற்றால் எவரும் கேள்வி எழுப்பக் கூடிய அளவிற்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |