நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் சிறந்த விமர்சனங்களை பெற்றது. மேலும் நடிகர் தனுஷின் திரைப்பயணத்திலேயே கர்ணன் படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது.
Elated to announce that after the blockbuster success of Karnan, Mari Selvaraj and myself are joining hands once again. Pre production going on,
Shoot will commence next year.— Dhanush (@dhanushkraja) April 23, 2021
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைய இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் . அதில் ‘கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மாரிசெல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி . இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும்’ என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.