Categories
உலக செய்திகள்

ரஷ்யா அதிபரின் திடீர் முடிவு…! பின்வாங்கும் படைகள்… அமைதியாகும் எல்லைகள்….!!

ரஷ்யா உக்ரேனிய மற்றும் கிரிமிய எல்லையில் நிறுத்தியிருந்த ராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய சார்புடைய உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கும், உக்ரேனியத்தின் ராணுவத்தினருக்குமிடையே கடந்த 2014 முதலில் இருந்தே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா சுமார் 1,00,000 திற்கும் மேலான ராணுவ வீரர்களை உக்ரேனியாவின் எல்லையில் குவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது. மேலும் கிரிமியின் தீபகற்ப எல்லையிலும் ரஷ்யா 40 போர்க் கப்பல்களையும், சுமார் 10,000 வீரர்களையும் திட்டமிட்டபடி நிறுத்தியுள்ளதாக மாஸ்கோ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதனை அமெரிக்கா கடுமையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் எச்சரிக்கையும் விடுத்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் உக்ரேனினுடைய ஜனாதிபதி ரஷ்யாவின் ஜனாதிபதியான புடினை நேரில் சந்திக்க தயார் என்று அறிக்கை விடுத்தார். மேலும் பல மில்லியன் கணக்கிலான மக்களினுடைய உயிருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த நிலையில் ரஷ்யா இனி வரும் வாரங்களில் கிரிமிய மற்றும் உக்ரேனிய எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களை திரும்ப பெறுவதாக  கிரிமியாவிற்கு ராணுவம் தொடர்பாக பயணம் செய்த பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |