நடிகர் சதீஷ் பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சதீஷ் . இவர் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021
இந்நிலையில் நடிகர் சதீஷ் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என பதிவிட்டு சதீஷ், சன்னி லியோன் இருவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.