Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளர் விருது…. குவியும் பாராட்டுக்கள்…!!!

நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வித்துறையின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல படங்களில் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கின்ற நடிகர் தாமு. இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் கடந்த பத்து வருடங்களாக கல்வி சேவையாளராகவும் செயலாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவரது முயற்சிக்கு பலன் அளிக்கும் விதமாக தேசிய கல்வி வளர்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடிகர் தாமுவுக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021 என்கின்ற தேசிய கல்வியாளர் கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் அவர் ஆற்றும் சில முக்கிய பங்களிப்புகளை கொண்டு நடிகர் தாமுவுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |