நாமக்கல் மாவட்டத்தில் நடந்து சென்று முதியவர் மீது வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பவித்திரம் ஏரிக்கரையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.