Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரிக்கு… காத்திருந்த பேரதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள 16 புதூர் ஊராட்சியில் சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக வேலை செய்து வரும் காளிமுத்து நேற்று மாலையில் கோவிலை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது காளி அம்மன் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடு போயிருந்தது.

மேலும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி காவல்துறையினர் கோவிலில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |