Categories
உலக செய்திகள்

அரை மணி நேரம் சுற்றி வந்துருக்கு… தத்தளித்த பொமேரியனை காப்பாற்றிய மற்றொரு நாய்… வலை தளத்தை கலக்கும் வீடியோ…!!

நீச்சல்குளத்தில் விழுந்த பொமேரியன் நாயை மற்றொரு நாய் பல வித முயற்சிக்கு பின் கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் பொமேரியன் நாய்  விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து அந்த பொமேரியன் நாய் நீண்ட நேரமாக முயற்சித்தும் அதனால் மேலே ஏற முடியவில்லை. இந்நிலையில் அதனை பார்த்த மற்றொரு நாய் ஒன்று தண்ணீரில் விழுந்த நாயை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த நாய் நீச்சல் குளத்தை சுற்றி சுற்றி ஓடி தண்ணீரில் விழுந்த நாயை காப்பாற்றுவதாக பலவித முயற்சிகளை செய்துள்ளது. சுமார் அரைமணிநேர  போராட்டத்திற்கு பின் நீருக்குள் விழுந்த பொமேரியன் நாயை மற்றொரு நாய் காப்பாற்றி கரை சேர்த்துள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பார்த்த அனைவரையும் இந்த சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Categories

Tech |