Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உல்லாசம் அனுபவித்த வாலிபர்கள்…. 10 அழகிகள் மீட்பு…. அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய ஒரு கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லியாம்பாளையம் பகுதியில் வீட்டில் 10 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் விபச்சாரம் நடந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டினுள் விபச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்ட அழகிகள் மேலும் உல்லாசம் அனுபவித்த இரண்டு ஆண்கள் மற்றும் விபச்சார புரோக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கிருந்த இரண்டு ஆண்கள், வீட்டில் விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து விபச்சாரத்துக்கு அழைத்து வரப்பட்ட 10  அழகிகளை மீட்டு வேலூர் காவல் நிலையம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |