ராணிப்பேட்டையில் நிலைதடுமாறிய டிரைவர் டிராக்டரினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் தாராபுரத்தில் சுகுமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கோடம்பாக்கத்திற்கு மேலேஏரி கிராமத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிக்கரையின் அருகே சென்று கொண்டிருக்கும்போது டிராக்டரை ஓட்டிச்சென்ற சுகுமாருக்கு நிலைதடுமாறியுள்ளது. இதனால் அவர் டிராக்டரினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.